

கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்தது.
வடக்கு கோவாவின் அா்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான இரவு விடுதியான பிா்ச் பை ரோமியோ லேனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் கோவா போலீஸார், இரவு விடுதியின் உரிமையாளர்கள் இருவர் மீதும், அந்த விடுதியின் மேலாளர் மீதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.