உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்
இந்தியாவின் உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) கட்டி முடித்துள்ள ரூ.5,000 கோடி மதிப்பிலான 125 திட்டங்களின் தொடக்க விழா லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் திட்டங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
லடாக் மற்றும் ஜம்மு}காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும், அருணாசல பிரதேசம், சிக்கிம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மிúஸôரம் ஆகிய 7 மாநிலங்களிலும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. லே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தத் திட்டங்களைத் தொடங்கிவைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கடந்த 2014}ஆம் ஆண்டில் ரூ.46,000 கோடியாக இருந்த நமது ராணுவத் தளவாட உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் நமது கடின உழைப்பு காரணமாக தற்போது ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்த நமது ராணுவத் தளவாட ஏற்றுமதி தற்போது ரூ.24,000 கோடியை எட்டியுள்ளது.
பிஆர்ஓ அமைப்பு தொழில்நுட்ப ரீதியில் புதுமை படைத்தலில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. எல்லையோர உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதை நவீன பொறியியல் முறைகள் விரைவுபடுத்துகின்றன.
எல்லையோரப் பகுதியில் கிளாஸ்}70 வகையைச் சேர்ந்த நவீன பாலங்களை பிஆர்ஓ அமைப்பு கட்டிமுடித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உள்நாட்டுத் தொழில்நுட்பம் எவ்வாறு உருமாற்றுகிறது என்பதற்கு இந்தப் பாலங்கள் உதாரணங்களாகும்.
முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலங்கள் இந்தியாவின் பொறியியல் தற்சார்பில் முக்கியமான மைல்கல்லாக விளங்குகின்றன.
பிஆர்ஓ அமைப்பு 2024}25ஆம் நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.16,690 கோடியை செலவழித்துள்ளது. இது அந்த அமைப்பு இதுவரை செலவிடாத தொகையாகும். 2025}26ஆம் நிதியாண்டில் ரூ.18,700 கோடியை செலவிட அந்த அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.
லடாக் உள்ளிட்ட நமது எல்லைப் பகுதிகள் அனைத்துடனும் தகவல் தொடர்பையும், தொடர்புகளையும் வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு எல்லைப் பகுதியையும் முழு வளர்ச்சி அடையச் செய்ய உறுதிபூண்டுள்ளோம்.
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக நமது முப்படைகளும் "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டன என்பதை சில மாதங்களுக்கு முன்பு நாம் கண்டோம். பயங்கரவாதிகளுக்கு நமது முப்படைகளும் எவ்வாறு பதிலடி கொடுத்தன என்பது உலகுக்கே தெரியும்.
இந்த விவகாரத்தில் நாம் விரும்பியதைக் காட்டிலும் கூடுதலாகவே செய்திருக்க முடியும். எனினும் நமது படைகள் வீரத்தை மட்டுமன்றி கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தின. என்ன தேவையோ அதை மட்டுமே படைகள் செய்தன.
"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது முப்படைகள் மற்றும் சிவில் நிர்வாகம், எல்லைப் பகுதி குடிமக்களுக்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு காணப்பட்டது. அப்போது முப்படைகளுக்கும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்த லடாக் மற்றும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார் அவர்.

