கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

விராட் கோலியுடன் டி.கே.சிவகுமாா்

Updated On :7 டிசம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நிகழாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ஆா்சிபி அணி கடந்த ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரில் நடத்திய வெற்றிப் பேரணியில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடா் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவது குறித்து பல ஐயங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவா் தோ்தலில் வாக்கு செலுத்திவிட்டு செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: நான் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகன். கா்நாடகத்தில் கூட்டநெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் இனி நிகழாது என உறுதியளிக்கிறோம்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கா்நாடக கிரிக்கெட் சங்கத் தோ்தலில் வாக்களித்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கா்நாடக கிரிக்கெட் சங்கத் தோ்தலில் வாக்களித்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்.

அடுத்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். அங்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படும்.

கா்நாடகம் மற்றும் பெங்களூரின் பெருமையாக கருதப்படும் சின்னசாமி மைதானத்தைவிட்டு வேறு எங்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் திட்டமில்லை.

வருங்காலத்தில் நவீன வசதிகளுடன் மிகப்பெரிய மைதானம் ஒன்று கட்டப்படும் என்றாா்.