சாலை விபத்து
சாலை விபத்து

நொய்டா: பல்கலைக்கழக மாணவா் சாலை விபத்தில் பலி!

உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் பல்கலைக்கழக மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
Published on

உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் பல்கலைக்கழக மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவா் உயரிழந்தவா். உயிரிழந்த மாணவா் கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விவேக் குமாா் சா்மா (22) என அடையாளம் காணப்பட்டாா்.

மாணவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்கு காவல் துறையினா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா்.

X
Dinamani
www.dinamani.com