

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தேசியத் தலைநகர் தில்லியைப் பின்னுக்குத் தள்ளி, வேறொரு நகரம் முதல் இடம் வகிக்கிறது.
அந்த ஊர் வேறெங்குமில்லை, தில்லியிலிருந்து சுமார் 2 மணி நேர பயணத்தில் சென்றடையும் தொலைவில் அமைந்துள்ள காஜியபாத் நகர்தான்!
நவம்பர் மாத்த்தில் இந்தியாவின் மாசடைந்த நகரங்களின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில், ஹரியாணா மாநிலத்தின் முக்கிய நகரங்களே முன்னிலை வகிக்கின்றன. தீவிர மாசுபட்டால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் காஜியபாத்துக்கு முதலிடமும், அதனைத்தொடர்ந்து, நொய்டா, பஹதுர்கார், தில்லி, ஹபூர், கிரேட்டர் நொய்டா, பாக்பாத், சோனொபட், மீரட், ரோதக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி மையமான (சிஆர்இஏ) நிகழாண்டு நவம்பருக்கான மாதாந்திர காற்றின் தரம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வெளியிட்ட தரவுகளிலிருந்து மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளன. வேளாண் பொருள்களின் கழிவுகளை எரிப்பதைக் குறைக்க நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டும் தலைநகரைச் சுற்றியுள்ள என்சிஆர் பகுதியில் உள்ள நகரங்களில், மாசுபாடு கடந்தாண்டைவிட மோசமடைந்தே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.