

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் இந்தியப் பயணத்தையொட்டி செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தங்களை மிகவும் பாதித்திருப்பதாக இந்தியா வந்தடைந்த அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் வெள்ளிக்கிழமை(டிச. 5) இந்தியா-ரஷியா 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி - ரஷிய அதிபா் புதின் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், ஹைதராபாத் இல்லத்தில் செய்தி சேகரிக்க வருகை தந்திருந்த ரஷிய பத்திரிகையாளர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், உயர்நிலை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக, பத்திரிகையாளர்களின் சார்ஜர்கள், அழகு சாதனப் பொருள்கள், வாகனச் சாவிகள், தலைகோரும் சீப்புகள் உள்ளிட்ட பொருள்களும் தடை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புச் சோதனையின்போது, அவர்களின் தனிப்பட்ட உபகரணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அவர்களிடமே திருப்பியளிக்கப்படாமல் எடுத்துக்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர் ரஷிய பத்திரிகையாளர்கள். ஒருமுறை பாதுகாப்பு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரும், இரண்டாவது முறையும் பத்திரிகையாளர்கள் பலர் பாதுகாப்பு சோதனைக்கு ஆளாக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியதாக ரஷிய பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.