

புதிய விதிமுறைகள் காரணமாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு 7வது நாளை எட்டியிருக்கும் நிலையில், பெங்களூரிலிருந்து புறப்படும் 127 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பான டிஜிசிஏ, இண்டிகோ விமான சேவை நிறுவன தலைமைக்கு, திங்கள்கிழமை மாலைக்குள், விமான சேவை பாதிப்பு குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
பெங்களூர் விமான நிலையத்துக்கு வருகை தரும் 65 விமானங்களும், புறப்படும் 62 விமானங்கள் என 127 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 2ஆம் தேதி முதல், விமான சேவை ரத்து காரணமாக, மத்திய அரசு தரப்பிலிருந்தும், விமானப் பயணிகள் தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
விமானிகளுக்கான புதிய பணி நேரம் மற்றும் ஓய்வு நேரம் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமல், இண்டிகோ விமானங்களை இயக்க போதுமான விமானிகள் இல்லாததால் பல விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரு வாரமாக பயணிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
Flight disruptions at IndiGo entered the seventh day as the crisis-hit carrier cancelled 127 flights from Bengaluru Airport on Monday, a source said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.