

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான (பயோ டீசல்) உயிரி எரிபொருள் பயன்பாடு, இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விநியோக சங்கிலியில் இனி உயிரி எரிபொருளையும் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
பசுமை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்து மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும் மறுசுழற்சி ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தும் நோக்கத்திலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவ சேவைப் படையின் 265 வது படைப்பிரிவு தினத்தையொட்டி, ராணுவத்தில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி தில்லியில் இன்று (டிச. 8) நடைபெற்றது.
லெப்டினென்ட் ஜெனரல் புஷ்பேந்திர பால் சிங், ராணுவ துணைத் தளபதி, ராணுவ மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ராணுவ எரிபொருள் சங்கிலியில் உயிரி எரிபொருள் பயன்பாடு தொடக்கி வைக்கப்பட்டது.
எரிபொருள் பயன்பாட்டில் மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், கரும்பு உள்ளிட்டவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இ-20 பெட்ரோலை பயன்படுத்த ராணுவம் ஒப்புக்கொண்டது. இ-20 பெட்ரோலில் 20% எத்தனால் இருப்பதால் மாசுபாடு குறைவாகும்.
தற்போது, உயிரி எரிபொருளைப் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது, இயற்கையை பாதுகாப்பதில் உள்ள ராணுவத்தின் அக்கறையைக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க | தேசிய கீதம் போன்று... தேசிய பாடலுக்கு இடம் கொடுக்கவில்லை: ராஜ்நாத் சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.