சித்தராமையா சிவகுமாருடன் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே
சித்தராமையா சிவகுமாருடன் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேPTI

கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம்? ‘காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு உடன்படுவேன்’ - சித்தராமையா

காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்வேன்: சித்தராமையா
Published on

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் பற்றிய குழப்பம் நிலவும் சூழலில், காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதனையேற்றுக் கொண்டு அதன்படி நடந்து கொள்வேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை; அப்படியொரு கேள்விகே இடமில்லை என்று சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி.யுமான யதிந்திரா சித்தராமையா தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில், ‘சித்தராமையாவே ஐந்தாண்டுகளுக்கும் முழுமையாக முதல்வராக நீடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பெலகாவியில் இன்று(டிச. 8) செய்தியாளர்களுடன் பேசிய சித்தாரமையாவிடம் அவரது மகன் தெரிவித்த கருத்துகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து சித்தராமையா பேசியிருப்பதாவது: “கட்சி மேலிடம் என்ன முடிவை எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன்” என்றார்.

கர்நாடகத்தில் கடந்த 2023முதல் முதல்வர் பதவி வகிக்கும் சித்தராமையாவுக்கும் துணை முதல்வரான டி. கே. சிவகுமாருக்கும் இடையே உள்கட்சி பூசல் நிலவுகிறது. கர்நாடக முதல்வர் பதவியை ஆட்சியின் பிற்பகுதியில் தமக்கு விட்டுத்தர சிவகுமார் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இருதரப்பிடமும் சமாதானப் பேச்சை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைமை, அடுத்த சட்டப்பேரவை தேர்தல் வரை சித்தராமையாவே தலைமைப் பதவியில் நீடிப்பதை உறுதி செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com