பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

மசோதா திங்கள்கிழமை(டிச. 8) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
PTI
Updated on
1 min read

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் வரி விதிக்க வகை செய்யும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

‘சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் (கூடுதல் வரி) மசோதா 2025’- என்ற மசோதா மக்களவையில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இம்மசோதா திங்கள்கிழமை(டிச. 8) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது: சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ், பான் மசாலாக்கள் மீது நுகா்வின் அடிப்படையில் அதிகபட்சமாக 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி வருவாயை, புதிதாக கொண்டுவரப்படும் செஸ் வரி விதிப்பு பாதிக்காது. செல் வரியைப் பொருத்தவரை, பான் மசாலா உற்பத்தி நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களின் உற்பத்தித் திறன் மீது விதிக்கப்படுவதாகும். இந்த செஸ் வரி விகிதம் உற்பத்தித் திறனுக்கேற்ப ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். மேலும், இந்த செஸ் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணா்வு அல்லது பிற சுகாதாரத் திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படும் என்றாா்.

Summary

Parliament passes bill to levy cess on pan masala manufacturing units.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com