

தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சுப்ரபாதம் நிகழ்ச்சி காலையில் புத்துணர்ச்சியூட்டும் தொடக்கத்தைத் தருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சுப்ரபாதம் நிகழ்ச்சி காலைப் பொழுதைப் புத்துணர்ச்சியான தொடக்கத்தைத் தருவதாகவும், யோகா முதல் இந்திய வாழ்க்கை முறையின் பல்வேறு அம்சங்கள் வரை பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
இந்திய மரபுகள் மற்றும் மதிப்புகளில் வேரூன்றிய இந்த நிகழ்ச்சி, அறிவு, உத்வேகம் மற்றும் நேர்மறை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது என்று எடுத்துரைத்தார்.
சுப்ரபாதம் நிகழ்ச்சியில் ஒரு சிறப்புப் பகுதிக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதன் மூலம், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து ஒரு புதிய உணர்வு விதைக்கப்படுகிறது என்றும் பிரதமர் எக்ஸ் பதிவில் இவ்வாறு கூறினார்.
இதையும் படிக்க: காவலரைக் கடித்த தவெக தொண்டர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.