

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியா - உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், இந்தப் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது, “ரஷிய - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாகவும், போருக்கு சுமுக தீா்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும்” என்று புதினிடம் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், வருகின்ற ஜனவரி மாதத்தில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் தில்லிக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரின் பயணத் தேதிகள் குறித்து இந்தியா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக இரு நாட்டுத் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
தொடர்ந்து, போர் நிறுத்த அமைதி ஒப்பந்த அம்சங்களையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார். இதனை ரஷியா ஏற்றுக்கொண்ட நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாகவும் ஒருதலைபட்சமாகவும் உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் மறுத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.