

வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டோபாதயாயை "பங்கிம் டா" என்று அழைத்து அவமதித்ததாகவும் அதற்காகப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
குச்பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மமதா பானர்ஜி கூறியதாவது,
நாடு சுதந்திரம் அடைந்தபோது பிரதமர் பிறக்கவே இல்லை, வங்காளத்தின் மிகச்சிறந்த கலாசார சின்னங்களில் ஒருவரான சந்திர சட்டோபாதயாயை சாதாரணமாக உரையாற்றினார்.
நீங்கள் அவருக்குத் தகுதியான குறைந்தபட்ச மரியாதையைக் கூட கொடுக்கவில்லை. இதற்காக நீங்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சட்டோபாத்யாய எழுதிய தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் திங்களன்று மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பிரதமர் அவரை மரியாதையின்றி சாதாரணமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி சௌகதா ராய் "பங்கிம் டா" என்று பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்குப் பதிலாக "பங்கிம் பாபு" என்று அழைக்குமாறு பிரதமரை அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி உடனடியாக அவருடைய உணர்வை மதித்து இனி "நான் பங்கிம் பாபு" என்றே அழைப்பேன் என்று கூறினார்.
இதனிடையே மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்காளத்தின் கலாசாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை அழித்துவிடும் என்று மமதா கூறினார்.
எஸ்ஐஅர் நடைமுறைக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.