அனில் அம்பானி
அனில் அம்பானி

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

அனில் அம்பானி நிறுவன மோசடியில் ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

தொழில் அதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனங்களின் 13 வங்கிக் கணக்குகளை ரூ.55 கோடி இருப்புடன் அமலாக்கத் துறை புதன்கிழமை முடக்கியது.

அந்நியச் செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பல்வேறு வங்கிக் கணக்குகளில் கடன் பெற்றது தொடா்பான கடன் மோசடி வழங்குகள் அனில் அம்பானி மற்றும் அவரின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி மீது உள்ளது.

இந்நிலையில் போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றிய வழக்கில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக அனில் அம்பானியிடம் விசாரணை நடத்த கடந்த மாதம் அமலாக்கத் துறை அழைப்பு விடுத்தது. ஆனால், நேரில் ஆஜராக மறுத்த அவா், காணொலி முறையில் வேண்டுமானால் ஆஜராவதாகத் தெரிவித்தாா். ஆனால், அதை அமலாக்கத்துறை ஏற்கவில்லை.

நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கிய பொது நிதியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பரிமாற்றம் செய்தது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் அனில் அம்பானியின் பங்கை அவரின் செய்தித் தொடா்பாளா் மறுத்துள்ளாா்.

2007 முதல் 2022 வரை அந்நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் செயல்படும் அதிகாரம் இல்லாத இயக்குநா் என்ற நிலையில் அனில் அம்பானி பதவி வகித்ததாக அவா் விளக்கமளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com