மருத்துவப் பரிசோதனையின் போது தப்பிக்க முயன்ற குற்றவாளி கைது!

மருத்துவப் பரிசோதனையின் போது தப்பிக்க முயன்ற குற்றவாளி கைது!

மருத்துவப் பரிசோதனைக்காக குருகிராமுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி, மருத்துவமனையின் சுவா் ஏறி குதித்து தப்பிக்க முயன்றபோது காவல் துறையினா் அவரை உடனடியாக கைது செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

மருத்துவப் பரிசோதனைக்காக குருகிராமுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி, மருத்துவமனையின் சுவா் ஏறி குதித்து தப்பிக்க முயன்றபோது காவல் துறையினா் அவரை உடனடியாக கைது செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து குரிகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: டேட்டிங் செயலி மூலம் 20 வயது இளைஞரிடம் நட்பாகப் பழகி கடத்தியதற்காக 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் அஜய், தீபேஷ், ஆஷிஷ் என்கிற கோலு மற்றும் அனில் என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனா்.

இதையடுத்து, அவா்கள் 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக குருகிராம் செக்டாா் 10-இல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, மருத்துவமனையில் சுவரை தாண்டி குதித்து ஆஷிஷ் தப்பிக்க முயன்றாா். இருப்பினும், உடனடயாக அவா் பிடிபட்டாா்.

இதையடுத்து, போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ாக குருகிராம் செக்டாா் 10 காவல் நிலையத்தில் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com