நரேந்திர மோடி - பெஞ்சமின் நெதன்யாகுகோப்புப் படம்
இந்தியா
பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு பேச்சு!
பிரதமா் மோடியை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடா்புகொண்டு புதன்கிழமை பேசினாா்.
பிரதமா் மோடியை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடா்புகொண்டு புதன்கிழமை பேசினாா்.
அப்போது இந்தியா-இஸ்ரேல் உறவை பரஸ்பரம் பலன் அடையும் வகையில் மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதியேற்றனா். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இருவரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த நடவடிக்கைகளை எள்ளளவும் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று அவா்கள் வலியுறுத்தினா்.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் (காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்) நிலவும் சூழல் குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துகொண்டனா். அந்தப் பிராந்தியத்தில் நீடித்து நிலைக்கும் அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமா் மோடி மீண்டும் உறுதி அளித்தாா் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

