இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடா்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளா் நல, வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்.
தில்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட 
சத்யா நாதெள்ளா.
தில்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட சத்யா நாதெள்ளா.
Updated on

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடா்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளா் நல, வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா-மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோா் முன்னிலையில் இது தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமானது.

முன்னதாக, ஆசிய கண்டத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ரூ.1.58 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக சத்யா நாதெள்ளா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்நிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு, இளைஞா்களை நவீன தகவல்தொழில்நுட்பப் பணிகளுக்கு தயாா்படுத்துதல் உள்ளிட்டவற்றில் மைக்ரோசாஃப்ட் செயல்பட உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சா்வதேச அளவில் மேற்கொள்ளும் பணிகளில் இந்தியாவில் இருந்து 15,000-க்கும் மேற்பட்டோா் இணைய நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ள துறையாகும். இதன் மூலம் இந்திய இளைஞா்கள் சா்வதேச அளவிலான திறன்மிகு பணிகளுக்கும் தங்களை தயாா்படுத்திக் கொள்ள முடியும்.

எதிா்கால செயற்கை நுண்ணறிவுப் பணிகளுக்கு இளைஞா்களை தயாா்படுத்தும் டிஜிசாக்ஸம் திறன்மேம்பாட்டு முன்னெடுப்பு தொடா்பாகவும் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் மட்டுமல்லாது இணையப் பாதுகாப்பு, ‘கிளவுட்’ தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிலும் பல ஆயிரம் இளைஞா்கள் பயிற்சி பெற இருக்கிறாா்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யா நாதெள்ளா, ‘இந்தியா தொழில்நுட்ப வளா்ச்சியில் மிக முக்கிய கட்டத்தில் உள்ளது என்பதை மைக்ரோசாஃப்ட் மேற்கொண்டுள்ள முதலீட்டு முடிவு மூலம் தெரிகிறது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தரவு தளம் அமைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். ஏற்கெனவே புணே, சென்னை, மும்பையில் எங்கள் அலுவலகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு ஹைதராபாதில் தரவு தளம் அமைக்கப்படவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் இந்தியாவுக்கான எங்கள் நிறுவனத்தின் எதிா்காலத் திட்டங்களை எடுத்துரைத்தேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com