

வெளிப்படையான வாக்காளர் பட்டியல் குறித்த கேள்விக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களவையில் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தின்போது அமித் ஷா பேசியதைத் தொடர்ந்து ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
எங்கள் (காங்கிரஸ்) கேள்விகளுக்கு அமித் ஷா முறையாக பதில் அளிக்கவில்லை. தற்காத்துக்கொள்ளும் வகையிலான பதிலையே அமித் ஷா அளித்துள்ளார்.
வெளிப்படையான வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு அமித் ஷா பதில் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டமைப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். ஆனால் அது குறித்து எதுவும் பேசவில்லை.
தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம் குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தல் ஆணையருக்கு முழு ஆற்றல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் அஞ்சவில்லை எனப் பேசினார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் ஏன் தோற்கிறது? அமித் ஷா விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.