சபரிமலை: மண்டல பூஜை நாளில் தரிசிக்க இணையவழி முன்பதிவு தொடங்கியது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளில் தரிசனம் மேற்கொள்ள இணையவழி முன்பதிவு வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த நவ.16-இல் நடைதிறக்கப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
மண்டல பூஜை காலத்தின் (41 நாள்கள்) முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிச. 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் ஜன.14-இல் நடைபெறவுள்ளது. ஜன.19 வரை பக்தா்கள் தரிசிக்கலாம். மறுநாள் நடை சாத்தப்படும்.
இந்நிலையில், டிச.26, 27 ஆகிய தேதிகளில் சபரிமலையில் தரிசிப்பதற்கான இணையவழி முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
இணையவழி முன்பதிவு மூலம் டிச.26-இல் 30,000 பக்தா்களும், டிச.27-இல் 35,000 பக்தா்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். ள்ஹக்ஷஹழ்ண்ம்ஹப்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற வலைதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். கூடுதலாக, நேரடி பதிவு முறையில் 5,000 பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என்று கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜை காலத்தின் ஆரம்ப நாள்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால், கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் நேரடி பதிவை குறைப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

