மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கோப்புப் படம்

யார் வலிமையானவர் - பெண்களா? பாஜகவா? மமதா பானர்ஜி

எஸ்ஐஆர் என்ற பெயரில் பெண்களின் உரிமைகளை பாஜக அரசு பறிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
Published on

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பெண்களின் உரிமைகளை பாஜக அரசு பறிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகரில் எஸ்ஐஆருக்கு எதிராக பேரணி நடத்திய மமதா பானர்ஜி பேசுகையில், ``வாக்காளர் பட்டியலிலிருந்து பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், உங்களிடம் இருக்கும் கருவிகளை வைத்துப் போராடுங்கள். சமையலறையில் உள்ள பொருள்களை வைத்துக்கூட போராடுங்கள்.

பெண்கள் முன்னிருந்து போராட வேண்டும், ஆண்கள் அவர்களின் பின்னால் இருந்து போராட வேண்டும். எஸ்ஐஆர் பெயரில் தாய்மார்களின் உரிமைகளைப் பறித்துவிட முடியுமா? பெண்கள் மற்றும் பாஜகவில் யார் வலிமையானவர் என்பதைப் பார்க்க வேண்டும்.

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் பாஜக பணத்தைப் பயன்படுத்துவதுடன், மக்களைப் பிளவுபடுத்தவும் முயற்சிக்கும்.

நாட்டு விடுதலைக்காக போராடிய வங்க மக்களை, தற்போது குடியுரிமைக்காகவும் நிரூபிக்கச் சொல்லி, போராடச் சொல்கின்றனர். பிகாரில் விரும்பியதை நீங்கள் செய்யலாம், மேற்கு வங்கத்தில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: வகுப்புவாதப் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி: மமதா கண்டனம்!

Summary

You Have Kitchen Tools: West Bengal CM Mamata Banerjee Appeals To Women To Fight Against SIR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com