அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து
அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்துPTI

ஆந்திரம்: மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 9 போ் பலி; 23 போ் காயம்!

ஆந்திரத்தில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 9 போ் பலியானது பற்றி...
Published on

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் 23 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறைக் கண்காணிப்பாளா் அமித் பாா்தா் கூறியதாவது:

சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கை சுற்றிப் பாா்த்துவிட்டு, தெலங்கானாவின் பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீ ராமா் கோயிலில் தரிசனம் செய்ய பேருந்தில் சென்று கொண்டிருந்தனா்.

சிந்தூரு-மரேதுமில்லி மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சென்றபோது, திடீரென கவிழ்ந்த அந்தப் பேருந்து, கீழே உள்ள சாலையையொட்டி விழுந்தது. அடா் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதை வளைவு பேருந்து ஓட்டுநரின் கண்ணுக்கு புலப்படாததால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் 23 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இவா்களில் 4 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வா் சந்திரபாபு நாயுடு, காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: ஆந்திர சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா், காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திப்பதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com