

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய சதி நடைபெற்று வருவதாக, விகாஷீல் இன்சான் கட்சியின் (விஐபி) தலைவர் முகேஷ் சஹானி பேசியுள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியில் போட்டியிட்ட முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, முகேஷ் சஹானி தலைமறைவானதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பாட்னா விமான நிலையத்தில், செய்தியாளர்களுடன் இன்று (டிச. 12) பேசிய விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி, முதல்வர் நிதீஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய சதி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“கொஞ்சம் நாள்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். முதல்வர் நிதீஷ் குமாருக்கே அவர் எத்தனை நாள்கள் பதவி வகிப்பார் எனத் தெரியாது. அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு சதித் திட்டம் நடைபெற்று வருகின்றது.
யாருடன் எந்த எம்எல்ஏ தொடர்பில் இருக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சரியான நேரத்தில் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும்” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: அகமதாபாத்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து- 35 பேர் மீட்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.