அந்தமான் நிகோபார் தீவில், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்ட விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் இன்று (டிச. 12) திறந்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அந்தப் பூங்காவில் இன்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா மற்றும் மோகன் பாகவத் ருத்ராக்ஷ மரக்கன்றுகளை அங்கு நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், அந்தமான் நிகோபாரின் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி பங்கேற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஜயபுரத்தில் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அமைச்சர் அமித் ஷா மற்றும் மோகன் பாகவத், சாவர்க்கர் குறித்து உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடலை வெளியிடவுள்ளனர்.
முன்னதாக, விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், அந்தமானில் உள்ள காலாபானி சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உ.பி.: பெற்றோருக்கு நடுவில் தூங்கிய குழந்தை திடீர் பலி- மனதை உலுக்கும் சோகப் பின்னணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.