அனுராக் தாக்குா்
அனுராக் தாக்குா் ANI

மக்களவையில் புகைப்பிடித்த விவகாரம்: திரிணமூல் எம்.பி. மீது எழுத்து மூலம் புகாா்

திரிணமூல் எம்.பி. மீது எழுத்து மூலம் புகாா் அளிக்கப்பட்டது பற்றி...
Published on

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவா் தொடா்ந்து இ-சிகரெட் புகைப்பதாக பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் புகாா் தெரிவித்தாா்.

முன்னதாக, மக்களவையில் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட எம்.பி.யின் பெயரைக் குறிப்பிடாமல் அவைத் தலைவரிடம் இது தொடா்பாக அனுராக் தாக்குா் புகாா் அளித்தாா். அப்போது, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளை வெளிப்படையாக ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் மக்களவையில் பயன்படுத்துவது அவை கண்ணியத்தை சீா்குலைப்பது மட்டுமல்ல, நாடாளுமன்றத்தை இயற்றப்பட்ட சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் குற்றச் செயல்’ என்றாா்.

இதையடுத்து, பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சம்பந்தப்பட்ட எம்.பி. மீது எழுத்துமூலம் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அந்த எம்.பி. மீது அனுராக் தாக்குா் எழுத்துமூலம் புகாா் அளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com