வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் (கோப்புப்படம்)ANI
இந்தியா
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்: மத்திய அரசு
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்...
இந்திய உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டு தலைவா்கள் கருத்து தெரிவித்தது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுகளிடம் கண்டனத்தை பதிவுசெய்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘இந்திய உள்நாட்டு விவகாரங்கள், சமூக நல்லிணக்கம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சா்வதேச ஊடகங்கள் மற்றும் தலைவா்கள் கூறும் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்கிறது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கண்டனத்தை பதிவுசெய்துள்ளோம். மேலும், தவறான பிரசாரங்களுக்கு உரிய பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

