

தேசியத் தலைநகரை அடர்த்தியான புகைமூட்டம் சூழ்ந்ததையடுத்து, காற்றின் தரக் குறியீடு 397 ஆகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி,
தில்லியில் உள்ள மொத்த கண்காணிப்பு நிலையங்களில் 21 நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டி கடுமையான பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
வஜிர்பூரில் அதிகபட்சமாக 445 ஆகவும், அதைத் தொடர்ந்து விவேக் விஹாரில் 444, ஜஹாங்கீர்புரியில் 442, ஆனந்த் விஹாரில் 439, அசோக் விஹார் மற்றும் ரோஹினியில் தலா 437 ஆகவும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
நரேலாவில் காற்றுத் தரக் குறியீடு 432 ஆகவும், அதைத் தொடர்ந்து பிரதாப்கஞ்சில் 431, முண்ட்காவில் 430, மற்றும் பவானா, ஐடிஓ மற்றும் நேரு நகரில் தலா 429 ஆகவும் பதிவாகியுள்ளது.
சாந்தினி சௌக் மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு தலா 423 ஆகவும், ஸ்ரீ ஃபோர்ட் மற்றும் சோனியா விஹார் ஆகிய இடங்களில் தலா 424 ஆகவும் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவித்தன.
புராரி கிராசிங்கில் காற்றுத் தரக் குறியீடு 414 ஆகவும், அதைத் தொடர்ந்து கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் தளத்தில் 409, நார்த் கேம்பஸ் மற்றும் ஆர்.கே. புரம் ஆகிய இடங்களில் தலா 408, மற்றும் ஓக்லா ஃபேஸ் 2-இல் 404 ஆகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.