

புது தில்லி: தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் விளைவாக மாநகரின் பெரும்பாலான பகுதிகள் சனிக்கிழமை(டிச. 13) இரவில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. தில்லியில் இரவில் ஒளி வெள்ளத்தில் ’இந்தியா கேட், கார்தவ்ய பாத்’ ஆகிய பகுதிகள் சிவப்பு புகை சூழ்ந்து காணப்பட்டது.
ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 488-ஆக பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சுவாசிப்பதில் சிரமத்தைச் சந்திப்பதாக தெரிவித்தனர். காற்று மாசு அளவு கடுமையாக உயா்ந்ததால், தில்லி, என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நிலை-4 கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் ஷ்(சி.ஏ.க்யூ.எம்.) சனிக்கிழமை அமல்படுத்தியது.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பைத் தொடர்ந்து, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தில்லி பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதியளவில் ஆன்லைன் முறையில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.