

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி அசாமின் சோனித்பூரில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிசரண் பூமிஜ் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் முக்கியமான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் போனை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் சில தரவுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய விமானப்படையில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணிபுரிந்தவர். மேலும் 2002இல் தேஸ்பூரின் சலோனிபரி தளத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவர் தேஜ்பூர் பல்கலைக்கழக பணியில் சேர்ந்து அதிலிருந்து விலகினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.