நாட்டில் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவோர் எத்தனை லட்சம்?

நாட்டில் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவோர் எத்தனை லட்சம் பேர் என்பது குறித்து
school children from eps
கோப்புப்படம்EPS
Updated on
1 min read

உயர் கல்வியில், இந்தியா வளர்ச்சி பெறுவதைப் போல ஒரு பிம்பம் கண் முன் தோன்றினாலும், தரவுகள் அதனை உண்மையில்லை என்றே கூறுகின்றன. காரணம், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவிகள் வகுப்புகளுக்குத் திரும்புவதில்லை என்பதே அது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்கள் சுமர் 85 லட்சம் பேர் பள்ளிக்கு வருவதில்லை என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள் என்றும் தரவுகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்பி ரேணுகா சௌத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சாவித்ரி தாகுர் அளித்த பதிலில், ஒட்டுமொத்த நாட்டிலும் உத்தரப்பிரதேசம், பள்ளிக்குவராத 9.9 லட்சம் மாணவர்களுடன் முதல் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம், அதிக பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும் மாநிலங்களில், பள்ளிக்கு வராத மாணவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. இதில் கேரளம், தெலங்கானா, லடாக் உள்ளன.

ஆனால், சில மாநிலங்களில், பெண் பிள்ளைகள் அதிகம் வெளியேறும் மாநிலங்களாக உள்ளன. அவற்றில் மகாராஷ்டிரம், இமாச்சல், மிசோரம் ஆகியவை உள்ளன.

மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பாமல், பாதியில் படிப்பைக் கைவிடக் காரணமாக, வேலைதேடி குடும்பங்கள் வேறு பகுதிகளுக்குச் செல்வது, குடும்பத்தின் ஏழ்மை நிலை, பெற்றோர்களின் இறப்பு போன்றவற்றால் குடும்ப பொறுப்பை ஏற்கும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர் முறை போன்றவை கூறப்படுகிறது.

மிகப்பெரிய மாநிலங்களில், மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இதனைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com