

ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இன்று (டிச.13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சால்ட் லேக் ஸ்டேடியத்திற்கு வருகைப்புரியும் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூட்டம் கூடிவருகிறது.
மெஸ்ஸியின் ரசிகை ஒருவர் தங்களது தேனிலவை ரத்து செய்துவிட்டு வந்தது வைரலாகி வருகிறது.
ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் அந்தப் பெண் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். ஏனெனில், மெஸ்ஸி வருகிறார். நாங்கள் அவரை 2010 முதலில் கவனித்து வருகிறோம் என்றார்.
மற்றுமொரு விடியோவில் இந்தப் பெண்ணின் கணவரும் இதேபோல் பேட்டி அளித்திருந்தார்.
மெஸ்ஸி சால்ட் லேக் திடலுக்கு காலை 10.50க்கு வருவார் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு, விளம்பரதாரர்களை மெஸ்ஸி சந்திக்கிறார்.
பிறகு, மோகன் பகான் அணியின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணியும் டையமண்ட் ஆர்பர் ஆல் ஸ்டார் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் மெஸ்ஸியின் மாஸ்டர்கிளாஸ் வகுப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து மெஸ்ஸி ஹைதராபாத் செல்கிறார். அடுத்து முன்பை வான்கடே திடலுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். கடைசியாக தில்லியில் பிரதமரைச் சந்திக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.