

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
உலகத்திலேயே மெஸ்ஸிக்கு வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சிலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
’கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ என்ற பயண திட்டத்தின்படி மெஸ்ஸி இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது.
கொல்கத்தாவில் தெற்கு டும்டும் - லேக் டவுன் பகுதியில் ஸ்ரீ பூமி ஸ்போர்டிங் கிளப் 70 அடி சிலையை நிறுவியுள்ளது. வெறுமனே 40 நாள்களிலே இந்தச் சிலையை அவர்கள் உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸி தனது கையில் உலகக் கோப்பையுடன் இருக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை மெஸ்ஸி காணெலி வாயிலாக திறந்து வைத்தது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க அமைச்சரும் ஸ்ரீபூமி ஸ்போர்டிங் கிளப் தலைவருமான சுஜித் போஸ், “இது மிகப்பெரிய சிலை. 70 அடி உயரம் கொண்டது. உலகத்திலேயே மெஸ்ஸிக்கு வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சிலை இதுதான் என்றார்.
கடைசியாக 2011-இல் கொல்கத்தா வந்த மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி வெனிசுலா உடன் 1-0 என வென்றது.
மெஸ்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வந்த சத்ரு தத்தா, “14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருவது மிகவும் நல்ல சூழ்நிலை. ரசிகர்கள் அவரைப் பார்க்க நல்லதொரு வாய்ப்பு. இந்தியாவில் மீண்டும் கால்பந்துடனான இணைப்பு வளரும். இதற்கு முன்பு இல்லாத வகையில் விளம்பரதாரர்கள் இந்திய கால்பந்திற்குக் கிடைக்கும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.