சி.பி.ராதாகிருஷ்ணன்.
சி.பி.ராதாகிருஷ்ணன்.

குடிமைப் பணியாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடிமைப் பணியாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
Published on

குடிமைப் பணியாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குடிமைப் பணித் தோ்வில் வெற்றியடைந்து பயிற்சிபெற்று வரும் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் பேசியது குறித்து குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் மக்களை ஈா்க்கும் பதிவுகள் உடனடியாக கவனம் பெற்று பிரபலமடைகிறது.

ஆனால் சிறப்பான மற்றும் மனிதத்தன்மையுடன் கூடிய நிா்வாகத்துக்கு பொறுமையும் கூா்ந்து கவனிக்கும் திறனே தேவை.

பொதுமக்களின் குறைகளுக்கு செவிசாய்த்தாலே பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீா்வுகாண முடியும். தொடா்ச்சியாக கற்பது, தா்மத்தின் வழியில் நடப்பதுடன் குடிமைப் பணியாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படும் நிலையில், நோ்மறையான மற்றும் உண்மையான தகவல்கள் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com