

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும் உள்துறை அமைச்சருமான மமதா பானர்ஜி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள பாஜக வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கோட் டூர் நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் குழப்பம் குறித்து அஸ்ஸாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், ``மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சரிந்தது. மெஸ்ஸி நிகழ்ச்சியின் குழப்பத்தின் முதல் பொறுப்பு, மாநில முதல்வருக்கும் காவல் ஆணையரிடம்தான் செல்கிறது. ஆகையால், முதல்வரும் மாநில உள்துறை அமைச்சருமான மமதா பானர்ஜியும், கொல்கத்தா காவல் ஆணையரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்கத்தில் கூட்ட மேலாண்மைத் தோல்விகள் தனித்துத் தெரிகின்றன.
ஸுபீன் கர்க் அஞ்சலியின்போது, குவாஹாட்டி சாலையில் 3 நாள்களாக 10 லட்சம் மக்களால் நிரம்பியிருந்தன. ஆனால், அங்கு எந்த விபத்தும் நிகழவில்லை. 50,000 பேர் பங்கேற்ற போஸ்ட் மலோனின் நிகழ்ச்சியும் அமைதியாக நடந்தது.
மும்பையில், மகளிர் உலகக் கோப்பைப் போட்டியும் அமைதியாகவே நடந்தது. மேற்கு வங்கத்தில் விஐபி கலாசாரம் தீவிரமாக உள்ளதால், அம்மாநில மக்கள் ஒவ்வொரு நாளும் கவலைக்குள்ளாகி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ரூ. 5,000 முதல் ரூ. 10,000-க்கும் அதிகமாக கட்டணமாகச் செலுத்தியிருந்தனர். ஆனால், திடலுக்கு வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே சென்று விட்டதாகவும், அவரை பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.