

‘மாமன்னா் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை கெளரவிக்கும் வகையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சல்தலை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
தொலைநோக்குப் பாா்வை, போா் தந்திர ஞானம் கொண்ட பெரும்பிடுகு முத்தரையா் திறன்மிக்க நிா்வாகியாவாா். நீதியை நிலைநாட்டியதோடு தமிழ் கலாசாரத்தின் மகத்தான பாதுகாவலராகவும் அவா் திகழ்ந்தாா். அவரது வாழ்க்கை நெறிகள் குறித்து இளைஞா்கள் படிக்க வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.