

புது தில்லி: தலைநகர் புது தில்லியில் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்றின் தரக் குறியீடு மாறியிருப்பது மக்களுக்கு பெரும் கவயை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜஹாங்கிர்பூர் பகுதியின் காற்றின் தரக் குறியீடு 498 புள்ளிகளை எட்டியது. மக்கள் மூச்சுவிட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். இன்று காலை விடிந்ததும், காற்று மாசு காரணமாக பனிமூட்டம் போல காணப்பட்டது.
மிகவும் மோசமான காற்று மாசு என்பது, வெறும் வாசிர்பூரில் மட்டுமல், அதன் அண்மைப் பகுதிகளான ரோஹினி, அசோக் விகார் பகுதிகளையும் தொட்டிருக்கிறது.
38 நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு, மோசம் என்ற அளவிலும் இரண்டு நிலையங்களில் 'மிகவும் மோசம் என்ற அளவிலும் இருந்தது.
மத்திய காற்று மாசு தரக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட விவரத்தில், முதல் 50 புள்ளிகள்தான் நல்லது. அடுத்து 51 - 100 வரையிலான புள்ளிகள் மோசமில்லை, 101 முதல் 200 மிதமான காற்று, 201 முதல் 300 மோசம் என்ற அளவிலும் 401 முதல் 500 வரை மிகவும் மோசம் என்ற அளவையும் குறிக்கிறது.
தில்லி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 461 ஆக உயர்ந்திருந்தது. இது இந்த குளிர்காலத்தில் நகரத்தின் மிகவும் மாசுபட்ட நாளாகவும், டிசம்பர் மாதத்தில் இரண்டாவது மிக மோசமான காற்றின் தர நாளாகவும் பதிவாகியுள்ளது, ஏனெனில் காற்றின் வீசம் வேகம் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை, காற்றில் கலந்திருந்த மாசுகளை மேற்பரப்பிலேயே தக்க வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
வஜீர்பூரில் உள்ள காற்று தர கண்காணிப்பு நிலையம் பகலில் அதிகபட்சமாக 500 காற்று தர குறியீட்டு (AQI) மதிப்பைப் பதிவு செய்தது, அதற்கு மேல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தரவுகளைப் பதிவு செய்யவில்லை.
தில்லியின் காற்றின் தரம் இதுபோன்ற 'கடுமையான' நிலையில் தொடர வாய்ப்புள்ளதாகவேக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.