

வாக்குத் திருட்டுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து தில்லியில் காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் பங்கேற்காதது ஏன்? என்பதற்கு அவர் விளக்கமளித்திருக்கிறார்.
ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அவர் திங்கள்கிழமை(டிச. 15) அளித்துள்ளதொரு பேட்டியில், “நேற்றைய நாளில்(டிச. 14) நான் வெளிநாட்டில் இருந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நான் அங்கு செல்வதாக திட்டமிடப்பட்டுவிட்டதால், அந்தப் பயணத் திட்டத்தை மாற்ற இயலவில்லை. என் பக்கம், எல்லாம் நன்றாகவே செல்கிறது” என்றார்.
சசி தரூரால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென்பதை அவர் ஏற்கெனவே அக்கட்சிக்கு தெரியப்படுத்திவிட்டதாக தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைமையில் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் சசி தரூர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.