எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது...
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வரைவுப் பட்டியல் இன்று (டிச.16) காலை வெளியிடப்பட்டது. இதில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளின் ஒரு பகுதியாக 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை வெளியிட்டது.

இதில், மேற்கு வங்கத்தில் 58 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் பேர், போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் என 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தம் 58,20,898 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அவர்களில், இறந்ததாக அடையாளம் காணப்பட்ட சுமார் 24,16,852 வாக்காளர்கள், இடம்பெயர்ந்த 19,88,076 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

12,20,038 வாக்காளர்கள் அடையாளம் காணப்படாத, காணாமல்போன வாக்காளர்கள் என்றும், 1,38,328 பெயர்கள் போலி வாக்காளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து மேலும், பிற காரணங்களுக்காக 57,604 பெயர்கள் நீக்கப்படுவதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Summary

Election Commission releases draft list after Bengal SIR, including names of voters set to be excluded

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com