

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம் :
100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிதாக சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை(டிச. 16) அறிமுகம் செய்திருப்பதை வன்மையாகக் கண்டித்து நாளை(டிச. 17) நாடெங்கிலும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரையும், அந்தச் சட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய புதிய மசோதவை மத்திய அரசு தயாரித்துள்ளது. ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று அறிமுகம் செய்து மசோதாவைப் பற்றி விளக்கி பேசினார்.
இந்த நிலையில், மசோதாவில் காந்தியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, ஜோதிமணி உள்பட பலர் இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(டிச. 17) நாடெங்கிலும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.