

பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா II ஓட்டிய காணொலி இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
ஜோா்டான் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை சென்றடைந்தாா். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமா் மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று, ஜோா்டான் மன்னா் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று, ஜோர்டான் இளவரசருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பெட்ரோ நகரைப் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அப்போது, ஜோர்டான் அருங்காட்சியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணித்த காரை அந்நாட்டின் இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா II ஓட்டினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா நாட்டுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்துக்குச் சென்று அந்நாட்டு இளவரசர் வழியனுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.