நேஷனல் ஹெரால்டு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தில்லி பிரேதச காங்கிரஸ் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ராஜீவ் பவனில் உள்ள தில்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டா்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் பேசுகையில், ‘எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்கும் தொடா் முயற்சிகளுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் நீண்டதாக இருக்கும். எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்கும் முயற்சியில் பாஜக அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. போலியாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், ஊழல் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது’ என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தில்லி காங்கிரஸின் முன்னாள் தலைவா் அனில் செளதரி கூறுகையில், ‘மத்திய அரசின் சா்வாதிகாரத்துக்கு எதிராக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் குற்றமற்றவா்கள் என நீதிமன்றம் நிரூபித்துள்ளது. அவா்கள் இருவரும் நோ்மையான தலைவா்கள்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com