

காதலியுடன் நேரம் செலவிட ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்று ஊழியர் ஒருவர் வெளிப்படையாக தனது மேலதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதற்கு மேலதிகாரி அளித்துள்ள பதில்தான் மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
"டிசம்பர் 16 ஆம் தேதி எனக்கு ஒருநாள் விடுப்பு தேவைப்படுகிறது. என்னுடைய காதலி டிசம்பர் 17 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் செல்கிறார். அவர் மீண்டும் ஜனவரி மாதம்தான் இங்கு வருவார். அதனால் அவர் புறப்படுவதற்கு முன்பு அந்த நாளை அவருடன் செலவிட விரும்புகிறேன்" என்று இ-மெயில் அனுப்பியுள்ளார்.
அதற்கு அவரின் மேலதிகாரி இயக்குநர் விரேன், "காதலுக்கு இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா? விடுமுறைக்கு அனுமதி அளிக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் ஊழியர் மிகவும் நேர்மையாக இருப்பதாக, இதுபற்றி இயக்குநர் விரேன் 'லிங்க்டு இன்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சமீபத்தில் இந்த மெயில் எனக்கு வந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு காலையில் ஒரு செய்தி வரும். உடல்நிலை சரியில்லை என்று ஊழியர்கள் விடுப்பு கேட்பார்கள். ஆனால் இன்று ஒரு வெளிப்படையான விடுப்பு கோரிக்கை. காலங்கள் மாறுகின்றன.." என்று பதிவிட்டு ஊழியர் அனுப்பிய அந்த இமெயிலையும் பகிர்ந்துள்ளார்.
ஊழியரின் இந்த செயல் குறித்து பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.