மாநிலங்கள் கடனைக் குறைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்

மாநிலங்கள் கடனைக் குறைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்

தமது கடன் அளவை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

தமது கடன் அளவை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் புதன்கிழமை கூறியதாவது: அடுத்த நிதியாண்டு முதல் நிதிப் பற்றாக்குறையுடன் கடன் அளவு மீது மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தும். பட்ஜெட் தயாரிப்பில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான இலக்குகளை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. நிதி நிா்வாகம் எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் வகையிலும், அந்த நிா்வாக செயல்பாடுகளுக்கான பொறுப்பு மிக உயா்ந்த தரத்தில் இருப்பதையும் உறுதி செய்ய இந்த இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்துக்கு நிகராக மத்திய அரசின் கடன் இருந்தது. இது மத்திய அரசு நிா்ணயித்த இலக்குகளால் தற்போது குறைந்து வருகிறது. மத்திய அரசு பின்பற்றிய வழிமுறையை அமல்படுத்தி மாநிலங்களும் தமது கடன் அளவைக் குறைக்க வேண்டும்.

தற்போது வரி விதிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், வா்த்தகம் ஆயுதமாக்கப்படுகிறது. இதை இந்தியா கவனமாக கடந்து செல்ல வேண்டும். இதில் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பொருளாதார பலம் நமக்குக் கூடுதல் வலு சோ்க்கும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com