

தி கோட் இந்தியா டூர்: இந்தியர்களின் அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி தெரிவித்து கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனா கால்பந்து நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். இங்கு தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
முதல்நாளான கொல்கத்தாவில் சரியான போதிய திட்டமிடல் இல்லாததால், நிகழ்ச்சி நடைபெற்ற சால்ட் லேக் திடல் போராட்டக்களமானது. ஆனாலும், அதைத் தொடர்ந்து ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
அங்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நட்புறவு கால்பந்துப் போட்டிகள், தில்லி முதல்வர் ரேகா குப்தா, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜேட்லி, மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து குஜராத் ஜாம்நகர் சென்ற அவர் ஆனந்த் அம்பானியின் உயிரியல் பூங்காவான வனதாராவையும் சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று அவரது தாயகம் திரும்பினார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்து விடியோ பதிவு ஒன்றையும் மெஸ்ஸி வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், ”நமஸ்தே இந்தியா! தில்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா என்ன ஒரு அற்புதமான பயணம். இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் அன்பான வரவேற்புக்கும், சிறப்பான விருந்தோம்பலுக்கும், அன்பின் வெளிப்பாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் கால்பந்துக்குப் பிகாசமான எதிர்காலம் இருக்கும் எனக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.