குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று (டிச. 17) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படம், குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இளம் வயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவில் 43 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு தகவல்! ஏன் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.