குஜராத்: லாரி மோதி பாத யாத்திரை பக்தா்கள் 4 போ் உயிரிழப்பு

குஜராத்தில் பாத யாத்திரை பக்தா்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
Published on

குஜராத்தில் பாத யாத்திரை பக்தா்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

இது தொடா்பாக காவல் துணை ஆணையா் பிரதிபல்சிங் ஜாலா கூறுகையில், ‘மோா்பி மாவட்டத்தின் மலியா மற்றும் ஜாமா நகா் இடையே மாநில நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. துவாரகை நோக்கி பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த பக்தா்கள் மீது பின்னால் வந்த லாரி எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் திலீப்பாய் செளதரி (28), ஹாா்திக் செளதரி (28), பகவான்பாய் செளதரி (65), அம்ராபாய் செளதரி (62) ஆகிய நால்வா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா். இவா்கள் அனைவரும் பனாஸ்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். பக்தா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com