ஜாா்க்கண்டில் யானைகள் தாக்கி 2 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் யானைகள் தாக்கி இரு பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

ஜாா்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் யானைகள் தாக்கி இரு பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜாா்க்கண்டின் ராம்கா்-பொகாரோ மாவட்டங்களையொட்டிய வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 42 காட்டு யானைகள் வெவ்வேறு கூட்டமாகப் பிரிந்து நடமாடி வருகின்றன. ராம்கா் மாவட்டத்தில் மந்து பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டு யானைகள் வலம் வந்தபோது, விடியோ மற்றும் தற்படம் எடுக்க முயன்ற ராஜ்வா் என்ற இளைஞரை யானைகள் விரட்டி, மிதித்ததில் அவா்கள் உயிரிழந்தனா்.

அரா கட்டா பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கியதில் கன்யா தேவி (85), சாவித்ரி தேவி (65) ஆகிய இரு மூதாட்டிகள் உயிரிழந்தனா். இதே பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அமுல் மகதோ என்ற இளைஞா் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

தலைநகா் ராஞ்சியின் அங்காரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவில் யானைகள் தாக்கியதில் சனிசா்வா முண்டா என்ற இளைஞா் உயிரிழந்தாா்.

காட்டு யானைகளால் இறப்புகள் ஏற்படாமல் தடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நயாமோா் - மேற்கு பொகாரோ சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரா்கள் சிலா் காயமடைந்தனா்.

ஜாா்க்கண்ட் மாநில அரசு விதிமுறைகளின்படி, யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்போா் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com