

இந்தியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி- குழந்தைகள் காப்பகங்களை மத்திய அரசு இயக்கி வருவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சாவித்திரி தாக்கூர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 14வது நாளாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று நடைபெற்ற விவாதத்தில், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சாவித்திரி தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான கவனிப்பையும், பாதுகாப்பையும் வழங்க உதவும் வகையில் நாடு முழுவதும் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி- குழந்தைகள் காப்பகங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.
இந்தியாவில் உள்ள 2,820 அங்கன்வாடி-குழந்தைகள் காப்பகங்களில் மொத்தம் 39,011 பேர் பயனடைந்து வருவதாகத் தெரிவித்தார். அதன்படி தில்லியில் அதிகபட்சமாக 502 காப்பகங்களில் 2,590 குழந்தைகளும், ஹரியாணாவில் 290 அங்கன்வாடி காப்பகங்களில் 626 குழந்தைகளும், அடுத்தபடியாக நாகாலாந்தில் 270 காப்பகங்களில் 3,122 குழந்தைகளும், கர்நாடகத்தில் 248 காப்பகங்களில் 5,837 பேரும், அதே சமயம் நாகாலாந்தில் 200 காப்பகங்கள் உள்ளன, இதில் 4243 பயனடைகின்றனர்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளுக்குப் பகல் நேரப் பராமரிப்பு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏப்ரல் 1, 2022 முதல் பால்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்களின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளன. மேலும் அதிகமான பெண்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியையும் லாபகரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். முறையான பகல் நேரப் பராமரிப்பு இல்லாததால், பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதற்குத் தடையாக உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான பகல் நேரப் பராமரிப்பு, காப்பகங்களின் தரம் மேம்படுத்துவது அவசரத் தேவையாக உள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிக்க: அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.