

ஆந்திரப் பிரதேசத்தின், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
விஜயவாடா மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில், மெட்ரோ ரயில் போக்குவரத்தைக் கொண்டு வருவதற்காக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (டிச. 19) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தில்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரண்டு மெட்ரோ அமைப்புகளுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இத்துடன், மெட்ரோ திட்டங்களுக்கான ஆரம்பக்கட்டப் பணிகளை விரைவில் தொடகுவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராயலசீமா மாவட்டத்தை முன்னணி தோட்டக்கலை மையமாக மேம்படுத்துவதற்கு, மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.