மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையொட்டி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
மக்களவைத் தலைவரின் அறையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரல்ஹாத் ஜோஷி, மத்திய அமைச்சா்கள் கே.ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி-ராம்விலாஸ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
18-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத் தொடா் நிறைவையொட்டி, பிரதமா் மோடி மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த பிற தலைவா்களுடன் இனிய கலந்துரையாடல் நடைபெற்ாக எக்ஸ் பதிவில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குறிப்பிட்டுள்ளாா்.

