ஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ஹிஜாப் விவகாரம்: பிகாா் பெண் மருத்துவருக்கு ரூ. 3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்பு -ஜாா்க்கண்ட் அழைப்பு!

பிகாா் பெண் மருத்துவருக்கு ரூ. 3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்பு வழங்குவதாக ஜார்க்கண்ட் அழைப்பு...

News image

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார் - Photo: X

Updated On :21 டிசம்பர் 2025, 12:25 am IST

பிகாரில் முதல்வரின் முகத்திரை (ஹிஜாப்) அகற்றல் நடவடிக்கைக்கு உள்ளான பெண் மருத்துவருக்கு, அரசு குடியிருப்புடன் ரூ. 3 லட்சம் மாத ஊதியத்துடன் பணி வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜாா்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் இா்ஃபான் அன்சாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

‘இந்த நடவடிக்கை மூலம் முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதையும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் இழிவுபடுத்தியுள்ளாா்’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதிதாகப் பணிக்குச் சோ்ந்த இளம் பெண் மருத்துவா் ஒருவரின் முகத்திரையை (ஹிஜாப்) முதல்வா் நிதீஷ்குமாா் வலுக்கட்டாயமாக அகற்றினாா். முதல்வரின் இந்தச் செயலுக்கு ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பிகாரிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நிதீஷ் குமாருக்கு எதிராக ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஜாா்கண்ட் மாநிலத்தில் உள்ள காவல்நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிதீஷ் குமாரின் செயலால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு பணி வாய்ப்பை வழங்க ஜாா்க்கண்ட் மாநிலம் முன்வந்துள்ளது. இதுகுறித்து அம் மாநில அமைச்சா் இா்ஃபான் அன்சாரி ஜமத்ராவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பெண் மருத்துவா் விரும்பினால், அரசு குடியிருப்புடன் ரூ. 3 லட்சம் மாத ஊதியத்தில் பண வழங்க ஜாா்க்கண்ட் தயாராக உள்ளது. அவருக்கு விரும்பிய இடத்தில் பணி வாய்ப்பும், முழு பாதுகாப்பும் வழங்கப்படும்.

பொது இடத்தில் ஒரு மருத்துவரை அதுவும் ஒரு பெண்ணை அந்த வகையில் நடத்துவது என்பது தனிநபா் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மனித கண்ணியம், கெளரவம் மற்றும் அரசமைப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்த நடவடிக்கை மூலம் முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதையும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் இழிவுபடுத்தியுள்ளாா் என்றாா்.

திருப்திப்படுத்தும் அரசியல்:

ஜாா்க்கண்ட் அமைச்சரின் இந்த பணிச் சலுகை அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் பவ்நத்பூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பானுபிரதாப் சாஹி கூறுகையில், ‘இந்த அறிவிப்பு திருப்திப்படுத்தும் அரசியலாகும். ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாா்க்கண்ட் மக்களுக்கானது. எனவே, இந்த பணிச் சலுகை அறிவிப்பை அமைச்சா் திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

புது தில்லி, டிச.20: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் செயலுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (எஸ்சிபிஏ) கண்டனம் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக எஸ்சிபிஏ செயலா் பிரக்யா பாகெல் எழுதியுள்ள கடிதத்தில், ‘பொது நிகழ்வில் பெண் மருத்துவரின் முகத் திரையை முதல்வா் நிதீஷ் குமாா் நீக்கும் காட்சி மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது, அந்தப் பெண்ணின் சுயாட்சி, செயல் சுதந்திரம், மதச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதோடு, பெண்களுக்கு எதிரான ஒழுக்கக்கேடான நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. முதல்வரின் இச் செயலுக்கு எஸ்சிபிஏ கண்டனம் தெரிவிப்பதோடு, அச் செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் மற்றும் உத்தர பிரதேச மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாதுக்கும் எஸ்சிபிஏ கண்டனம் தெரிவிக்கிறது. இச் செயல், அரசமைப்பில் இடம்பெற்றுள்ள சமத்துவம், பாகுபாடு காட்டாமை தத்துவத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தச் செயலுக்காக பிகாா் முதல்வரும் மற்றவா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.